100 ரூபாய் பொருளை 3500 ரூபாய்க்கு விற்பது நியாயமா? | mobile display cheap price

ஒரு சாமனியர் தன்னுடைய வேலை செய்யாத செல்போனை சர்வீஸ் சென்டர் க்கு கொண்டு செல்கிறார்.
அந்த செல்போன் டிஸ்பிளே ஒன்றும் தெரியவில்லை அதுதான் பிரச்சினை.


Display


ஜாஸ்தி ரேட்:
     சர்வீஸ் சென்டரில் உள்ளவர் இதனை சரி செய்ய 3500 ரூபாய் ஆகும் என்று கூறுகிறார்.இவரோ அவ்வளவு பெரிய தொகை கொடுத்து சரிசெய்ய விருப்பமில்லை.மேற்கொண்டு மற்ற சில கடைகளிலும் விசாரிக்க அதே தொகை தான் கேட்கிறார்கள்.வெளியேறுகிறார் அந்த இடத்தை விட்டு.



நண்பரின் அணுகுமுறை:
    முன்பொருமுறை தன் நண்பர் கூறிய ஒன்று நியாாபகம் வந்தது.கிராமத்தில்  ஒரு நண்பர் செல்போன் பழுது நீக்கி தருகிறார் என்று. உடனே அந்த நண்பரை சந்திக்க சென்ரார்.அந்த நபரிடம் போனைக்கொடுத்து பிரச்சினைகளை கூறினார்.அந்த நபர் பிரித்து சோதனை செய்து உள்ளிருந்து ஏதோ சிறு பிரச்சினையை சரிசெய்தார் உடனே செல்போன் வேலை செய்தது.ஒரு நிமிட வேலை கூட கிடையாது.முன்பு விசாரித்த கடைகளில் 2 நாட்கள் ஆகும் மற்றும் 3500 ரூபாய் ஆகும் என்று கூறினார்களே என்பதை நினைத்து கொண்டு நண்பரிடம் எவ்வளவு என்றேன்.அவர் சாதாரணமாக இதற்கு போய் எதற்கு பணம் போய்ட்டு வாங்க என்றார்.சும்மா போககூடாது என்று சைடு பட்டன் ஒன்றை மாட்டித்தர சொன்னேன்,செய்துகொடுத்தார்.அதற்கு எவ்வளவு என்றேன் வேண்டாம் என்று கூறிவிட்டார்.நான் கட்டாயப்படுத்தி 100 ரூபாய் கொடுத்து விட்டு சென்றேன்.

சந்தேகம்:
    தன் நண்பரின் நண்பர் என்பதால் நம்மிடம் பணம் வாங்கவில்லையோ என்று நண்பருக்கு போன் செய்தார்.விசாரித்ததில் அவன் யாரிடமும் அதிக தொகை வாங்கமாட்டான் மேலும் அந்த பொருள் வாங்க ஆகும் செலவு மற்றும் சென்று வர போக்குவரத்து செலவு மட்டுமே வாங்குவான் என்று தெரிந்தது.இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்று கூறிவிட்டு போனை கட் செய்தேன்.

தெரிந்து கொண்டது:
     நாம் தீர விசாரித்து ஒரு செயலை செய்யும் போது எளிமையாகவும் செலவு குறைவாகவும் ஆகிறது.

Post a Comment

0 Comments