ஆதார் கார்டை எப்பவும் போல் பயன்படுத்தலாம்-ஆதார் அறிவிப்பை வாபஸ் பெற்றது மத்திய அரசு
ஆதார் கார்டில் முழு எண்ணும் இருப்பது போல் அளிக்க வேண்டாம் என்கிற அறிக்கையை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திரும்பப்பெற்றுள்ளது.
Mask Aadhar
உரிய உரிமம் அல்லாத தங்கும் விடுதிகள்,திரையரங்குகளில் ஆதார் கார்டையோ அல்லது எண்ணையோ,ஆதார் நகலையோ சமர்ப்பிக்க வேண்டாம் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று காலை அறிவுறுத்தி இருக்கிறது.
ஆதார் அட்டையை பார்க்க வேண்டும் அல்லது நகல் வேண்டும் என்று ஏதேனும் தனியார் நிறுவனங்கள் கேட்டால் UIDAI வழங்கியுள்ள உரிய பயணாளர் உரிமை இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.கட்டாயம் ஆதார் நகல் வேண்டும் என்றால் அதற்கு பதிலாக மாஸ்க் ஆதார் என்றொரு கடைசி 4 இலக்க எண் மட்டும் உள்ள ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
Be safe
மேலும் பொது இடங்களில் அதாவது கணினி மையங்கள்-ல் பதிவிறக்கம் செய்வதை தவிர்க்குமாறும்,அப்படி பதிவிறக்கம் செய்யும் பட்சத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் அட்டையை கணினியில் இருந்து முற்றிலுமாக அழித்துவிட்டதை பயனர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் எனவும் எச்சரித்து இருந்தது.
G.O Returned
இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் திரும்பப் பெறப்பட்டது. எப்போதும் போல் ஆதார் அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
- Mask aadhar Download செய்யும் முறை
- முதலில் UIDAI இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
- Download Aadhar க்ளிக் செய்யவும்
- பதிவு செய்த மொபைல் எண்ணை உள்ளீடு செய்து OTP-க்கு காத்திருக்கவும்.
- OTP எண்டர் செய்து Download Masked Aadhar க்ளிக் செய்யவும்.
- பதிவிறக்கம் செய்த PDF வடிவிலான file-ஐ திறக்க பாஸ்வேர்டு உள்ளிடவும்.
- பாஸ்வேர்ட் மாதிரி:
0 Comments