சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தான்-ல் நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் தஞ்சாவூர், திருச்சி,சென்னை மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன.
இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அணியும் சிவகங்கை மாவட்ட அணியும் மோதின.இந்த போட்டியில் அறந்தாங்கி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
வெற்றி பெற்ற அறந்தாங்கி அணிக்கு பரிசுக்கோப்பையும் 30000 ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
0 Comments