அக்னி நட்சத்திரம் முடிந்தும் கொளுத்தும் வெயில் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.புதுக்கோட்டை மாவட்டம் பொறுத்தவரையில் அக்னி நட்சத்திரம் முடிந்து 10 நாட்கள் ஆகியும் வெயிலின் தாக்கம் குறைந்த பாடில்லை.
அக்னி நட்சத்திரம்:
தமிழகத்தை பொறுத்தவரை கோடை காலமாக கருதப்படும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை உஷ்ணத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.மேற்கொண்டு அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் வெயில் சுட்டெரித்தது.அக்னி நட்சத்திரமானது கடந்த மே மாதம் 4-ம் தேதி தொடங்கி 28-ம் தேதியுடன் முடிவடைந்தது.இந்தக் காலகட்டத்தில் வெயில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக இருந்தது.
அக்னி நட்சத்திரம் முடிந்த நாட்களில் வெயில் சற்று குறைந்து லேசான கோடை தூரல் போட்டது.இருந்த போதிலும் அக்னி நட்சத்திரம் முடிந்து விட்டது,வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து விடும் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்.
தலைகீழ் மாற்றம்
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்பும் அறந்தாங்கி பகுதியில் வெயில் கொளுத்துகிறது.இரவு நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும்,இதற்கிடையில் திடீர் என்று மின்வெட்டும் ஏற்படுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மே மாதம் முடிந்து ஜூன் மாதம் பிறந்தும் வெயிலின் கொடுமையால் வெளியில் செல்லும் பொதுமக்கள் வெப்ப தாக்கத்தினால் அவஸ்தைப்படுகின்றனர்.சுட்டெரிக்கும் வெயில் எப்போது தாக்கத்தை குரைக்குமோ என்று மக்கள் தவித்து வருகின்றனர்.
0 Comments