அறந்தாங்கியை மாவட்டமாக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தை இரண்டாக பிரித்து அறந்தாங்கியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் ராமச்சந்திரன் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளார்.
அறந்தாங்கி வர்த்தக சங்கமும் அறந்தாங்கி நகராட்சியும் இணைந்து மாவட்டமாக ஆக்குவதற்கான கோரிக்கையினை நிறைவேற்ற வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகப்பெரிய நகரஙகளில் ஒன்று அறந்தாங்கி.60000க்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட பெரு நகரமாகும்.கோரிக்கையில் 278 ஊராட்சிகளின் தலைநகரம் மற்றும் கடற்கரைப் பகுதியின் மையப்பகுதி மாவட்டம் ஆக்கலாம் என மக்கள் விரும்புகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சிப் பணிகளை அடிக்கல் நட்டு தொடங்கி வைக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கடந்த வாரம் வருகை தந்தார்.அந்த விழாவில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் பேசுகையில் எங்கள் தொகுதியின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக பல கோரிக்கையை முன்வைத்தார்கள்.அதில் முக்கியமாக பழுதடைந்து உள்ள அறந்தாங்கி நகர பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக மாற்றித்தர கோரிக்கை வைத்தார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் புதிய அதிநவீன பேருந்து நிலையம் வருவது உறுதி என அறிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து தற்போது அறந்தாங்கியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு அடிப்படையில் அனைத்து தகுதிகளும் உடைய அறந்தாங்கி நகரை மாவட்டமாக தரம் உயர்த்த வேண்டும் என மக்களின் கோரிக்கை வலுத்துள்ளது.
0 Comments