இலவச வோடாபோன் சிம் கார்டு
வோடாபோன் தற்போது புதுப்புது இலவச திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.அதில் மக்கள் விரும்பத்தக்க ஒன்று தான் இலவச 1 மாத இண்டர்நெட்டுடன் கூடிய சிம்கார்டுகள்.
அறந்தாங்கியில் வாரம் ஒருமுறை இது போன்ற ஆஃபர் Vi வழங்கி வருகிறது.
எல்லா நெட்வொர்க் ரீசார்ஜ்கள் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுக்க முதல் ஒரு மாதம் அளவற்ற கால் வசதி மற்றும் அன்லிமிடெட் இண்டர்நெட் வழஙகுகிறது.
அதில் மேலும் இலவச இரவு நேர அன்லிமிடெட் டேட்டா-வையும் வழங்குகிறது.சிறப்பு ஆட்-ஆன் ஆக மேலும் 1GB ஆக்டிவேட் செய்து கொள்ளும் வசதியையும் செய்து கொடுத்துள்ளது.இந்த Vi அன்லிமிடெட் சிம் புது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இருக்கிறது.
அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட எந்தவொரு நெட்வொர்க்கும் அதன் சிறப்பான சேவைகளை அனைவருக்கும் தர முடியாத காரணத்தால் ஒவ்வொரு தடவையும் அதற்கு போட்டியான நிறுவனங்கள் இது போன்ற சலுகைகளை வாரி வழங்குகிறது.
தொடர்ந்து நஷ்டத்தில் இயஙகி வந்த நிறுவனம் தற்போது மீள இதுபோன்ற வாடிக்கையாளர்களை மீண்டும் பெற ஆஃபர்களை அள்ளி தருகிறது.
0 Comments