SSLC,HSC Result: புதுக்கோட்டை மாவட்ட தேர்ச்சி விகிதம்

 புதுக்கோட்டை மாவட்ட தேர்ச்சி விகிதம்

Hscsslc


தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவியரின் தேர்வு முடிவு வெளியானது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 8 அரசு  பள்ளிகள் 100% தேர்ச்சி விகிதத்தை பெற்றனர்.

பத்தாம் வகுப்பு 87.85%

பன்னிரெண்டாம் வகுப்பு 91.5%

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சிலட்டூர்,தாந்தாணி,மாங்காடு,மண்டையூர்,கீழக்குறிச்சி,மண்ணவேளாம்பட்டி,திருமயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் லெம்பலக்குடி அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றனர்.

இன்று காலை தமிழக 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது.பண்ணிரெண்டாம் வகுப்புக்கு காலை 10 மணியிலும்,பத்தாம் வகுப்புக்கு மதியம் 12 மணி அளவிலும் முடிவுகள் வெளியானது.http://tnresults.nic.in என்ற அரசு இணையதளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகள் தேர்வு நடைபெறாமல் அனைவரும் தேர்ச்சி என்று இருந்து வந்தது.உலகமே கொரோனவால் சிக்கி ஸ்தம்பித்து இருந்ததால் மாணாக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வு என்பது இல்லாதிருந்தது.

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவ மாணவிகள் கடந்த மாதம் எழுதிய தேர்வு என்பதால் அரசு அதிக கண்டிப்புடன் விணாத்தாளை திருத்த வேண்டாமென கேட்டுக்கொண்டது.



Post a Comment

0 Comments